மகனின் ஆசைக்காக மீண்டும் திருமணம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் தம்பதியினர்!!! - Yarl Voice மகனின் ஆசைக்காக மீண்டும் திருமணம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் தம்பதியினர்!!! - Yarl Voice

மகனின் ஆசைக்காக மீண்டும் திருமணம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் தம்பதியினர்!!!




கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதி & நடிகரான பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாலசந்தரின் டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 அதனைத்தொடர்ந்து பல படங்களில் குறிப்பாக ஆசை, அப்பு, மொழி, கில்லி, வசூல் ராஜா MBBS, காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதில் காஞ்சிவரம் படத்திற்கு தேசிய விருதை வென்றார். 

நடிகர் பிரகாஷ் ராஜ் 1994ஆம் ஆண்டு தனது நீண்ட கால தோழியான நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். 

 இவர் நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதன் பிறகு 2009ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

பின்னர் பிரகாஷ்ராஜ் நடன இயக்குனர் போனி வர்மாவை 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்கிற மகன் இருக்கிறார். 

இந்நிலையில் பிரகாஷ்ராஜும், போனி வர்மாவும் தங்களின் 11-வது திருமண நாளை நேற்று கொண்டாடினார்கள். 

இந்நிலையில் மகன் வேதாந்த் ஆசைப்படி, மகன் முன்னிலையில் பிரகாஷ் ராஜ் - போனிவர்மா தம்பதியினர் நேற்று (24.08.2021) மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post