யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசியினை பெறாதோர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு தெரிவித்தார்
இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்தரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டமானது அதாவது வீடுகளிலிருந்து தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி பெறமுடியாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது இன்றைய தினம் யாழ் மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் இந்த நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாண நகர் பகுதிகளை உள்ளடக்கி இந்த வேலைத் திட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது
இந்த வேலைத் திட்டத்திற்கு ராணுவத்தினரின் வைத்திய பிரிவினர் பயன்படுத்தப்படுகிறார்கள்
தற்போது மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது தடுப்பூசியினை பெற விருப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது
அவ்வாறான ஒரு நிலைமை வேண்டாம் நாடு பூராகவும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது எனவே எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தடுப்பூசியினை கட்டாயமாக பெற வேண்டும்
கடந்த காலத்தில் தடுப்பூசி தொடர்பில் பயத்துடன் இருந்திருக்கலாம் ஆனால் இனி அந்த பயத்தை தவிர்த்து தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள் நாடு பூராகவும் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
அத்தோடு ராணுவத்தினரால. வீடுகளில் இருந்து தடுப்பூசி நிலையம் சென்று தடுப்பூசி பெறமுடியாதவர்களுக்காக நடமாடும் சேவையினை ஆரம்பித்துள்ளோம் எனவே தற்போதைய நிலைமையில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள தவறியவர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்
அத்தோடு யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு விடயத்தினை கூற விரும்புகின்றேன் சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள் ஊடகங்களில் வெளிவரும் சுகாதார நடைமுறைகள் அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுங்கள், ஒன்றுகூடல் களை தவிருங்கள்.
தற்போதைய நிலையில் மாகாணங்களுக்கிடையில் சுகாதார நடைமுறைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்சேவைகள் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் போலீசாருடன் இணைந்து இந்த நடவடிக்கைை விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும்் தெரிவித்தார்
Post a Comment