நல்லூர்க் கந்தன் ஆலய சூழலில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் தளர்வு - பூஜை நேரங்களைத் தவிர ஏனைய நேரங்களில் பயணிக்க அனுமதி - Yarl Voice நல்லூர்க் கந்தன் ஆலய சூழலில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் தளர்வு - பூஜை நேரங்களைத் தவிர ஏனைய நேரங்களில் பயணிக்க அனுமதி - Yarl Voice

நல்லூர்க் கந்தன் ஆலய சூழலில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் தளர்வு - பூஜை நேரங்களைத் தவிர ஏனைய நேரங்களில் பயணிக்க அனுமதி



நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த  தடைகளில் சில கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் இதனை அனைவரும் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில்  யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் யாழ்ப்பாண பொலீசாருடன் இன்றைய தினம் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

விசேட திருவிழாக்கள் மற்றும் பூசை நேரங்களை தவிர மீதி நேரங்களில் வீதிக் கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொதுமக்களை ஆலய சூழலில் உள்ள கடைகளுக்கு செல்லும் வகையில் அனுமதிக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இதனையடுத்து பயணத்தை களில் முதல்வர் சில தேர்வுகளை ஏற்படுத்தியுள்ளார். அதாவது ஆலய பூஜை நேரங்கள் மற்றும் விசேட திருவிழா நாட்கள் உள்ளிட்ட சில நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது ப்ளாக் அறிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post