ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர், நிறையப் படங்கள் நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் நடிகர் விஷால்.
தனது 44 ஆவது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடிய நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசியபோது “பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்களால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என நம்புகிறேன். மு.க.ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வார் என்பதால்தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.
நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “”ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர், நிறையப் படங்கள் நடிக்க வேண்டும்” என்று கூறினார்.
Post a Comment