ஒரே ஒரு கேள்விதான் இந்திய பிரதமரை குலுங்க குலுங்கச் சிரிக்கவைத்த சிறுமி - Yarl Voice ஒரே ஒரு கேள்விதான் இந்திய பிரதமரை குலுங்க குலுங்கச் சிரிக்கவைத்த சிறுமி - Yarl Voice

ஒரே ஒரு கேள்விதான் இந்திய பிரதமரை குலுங்க குலுங்கச் சிரிக்கவைத்த சிறுமி



உங்களைச் சந்திக்க வேண்டும் என மின்னஞ்சல் அனுப்பிய சிறுமியை, உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பேசிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தருணத்தில் சிறுமி எழுப்பிய ஒரு கேள்வி, மோடி உள்பட அங்கிருந்த அனைவரையும் சிரிக்கவைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசியலில் மூத்தத் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் பேத்தியும், அகமது நகர் மக்களவை உறுப்பினர் சுஜய் விகே பாட்டீலின் மகளுமான அனிஷா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஆசைப்பட்டுள்ளார்.

 உடனடியாக , தனது தந்தையிடம் பிரதமரைச் சந்திக்க தன்னை அழைத்துச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆனால், அதற்கு பாட்டீல், பிரதமர் மோடி பிஸியான மனிதர். அவரைச் சந்திக்க முன் அனுமதி வாங்காமல் போக முடியாது என மறுத்துள்ளார். 

இதனால், கவலைடைந்த அனிஷா, தனது முயற்சியைக் கைவிடவில்லை. உடனடியாக, தந்தையின் மடிக் கணினியிலிருந்து பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அந்த அஞ்சலில், “ஹலோ சார், நான் அனிஷா. உங்களை வந்து சந்திக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் மின்னஞ்சலைப் பார்த்த பிரதமர் உடனடியாக பதில் அளித்துள்ளார் (ரிப்ளை).

அதில் அவர், “டாட் கே சாலி ஆவ் பீட்டா (தயவுசெய்து விரைந்து வாருங்கள்)” எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதிலைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளார் அனிஷா. உடனடியாகத் தந்தையிடமும் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post