சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் மங்கள சமரவீரவை போல மற்றைய சமூகங்களின் நண்பன் வேறு யாரும் கிடையாது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் குறித்த தனது பதிவில் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
எமது நெருங்கிய நண்பரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர கோவிட் தொற்றினால் உயிர் நீத்தார்.
சிங்கள அரசியல்வாதிகளுக்குள் மற்றைய சமூகங்களின் நண்பன் இவரைப் போல் வேறு எவரும் கிடையாது.
விடுதலைப் புலிகளினுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தனது அமைச்சுப் பதவியை இழந்தவர்.
பின்னர் அதே பதவியை திரும்ப பெற்ற போது இலங்கையில் நீதிக்காகவும் பொறுப்புக் கூறலுக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர்.
Post a Comment