ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தலிபானிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலிபான்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயேகத்தினால் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.
ஜலாலாபாத்தில் தலிபானிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலிபானின் கொடியை அகற்றிய பின்னர் ஆப்கான் கொடியை ஏற்றினர் அதனை தொடர்ந்து தலிபான்கள் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment