தமிழில் 85-90களில் இருந்தே நடிக்கும் ஒருவர் நடிகை குஷ்பு சுந்தர். தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்த குஷ்பு, பின்னர் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். குஷ்புவுக்கென ஒரு வலுவான ரசிகர்கள் பட்டாளமே தமிழகத்தில் உருவாகினர்.
குறிப்பாக குஷ்பு நடித்த வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்ஷா மாமா, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து சுந்தர். சி-யை மணந்த குஷ்பு தற்போது அரண்மனை 3வது பாகத்தில் பணிபுரிந்துள்ளா
இதேபோல், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகும் அண்ணாத்தே படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது அரசியல், சீரியல், திரைப்படம், தயாரிப்பு என பல வகையிலும் இயங்கும் குஷ்பு தன் உடல் எடையை குறைத்துள்ளார். அவரது இந்த மாற்றம் வைரலாகி வருகிறது. அவரது உடல் மெலிந்த புதிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ‘பழைய வருஷம் 16 குஷ்பு மாதிரி ஆயிட்டாங்களே’ என திகைத்துப் போய் வருகின்றனர்.
இந்நிலையில் தான் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் குஷ்புவை திருமணம் செய்ய கேட்கிறார். அதற்கு குஷ்புவோ, “ஓ ஓ .. மன்னிக்கவும் நீங்க ரொம்ப லேட்.. சரியா சொல்லனும்னா 21 வருடங்கள் தாமதம் ஆகிவிட்டது. எனினும் என் கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என fun ஆக பதில் அளித்துள்ளார்.
Post a Comment