சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 106 பேருக்கு கொரோனா - Yarl Voice சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 106 பேருக்கு கொரோனா - Yarl Voice

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 106 பேருக்கு கொரோனா



சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று  103 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 25 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தோற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 34 பேரையும் அவர்களது உடல்நிலையைக் கணித்து ஒரு பகுதியினர் வீடுகளில் பராமரிக்கவும் மற்றொரு பகுதியினர் கோவிட்-19 இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும்  முதியவர்கள், பணியாளர்கள் 156 பேரிடம் இன்று அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 68 முதியவர்கள் மற்றும் 4 பணியாளர்கள் என 72 பேருக்கு கோவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. 

அவர்கள் கைதடி அரச முதியோர் இல்லத்தில் வைத்து மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post