பாடசாலைகளிற்கான கட்டுப்பாடுகளை மாநில அரசாங்கம் நீக்கியதை தொடர்ந்து ஹைதராபாத்தில் இன்று மாணவர்கள் பாடசாலைகளிற்கு சென்றனர்.
கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவது குறித்து பெற்றோர் மத்தியில் அச்சம் காணப்படும் நிலையில் 18 மாதங்களிற்கு பின்னர் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
சுகாதார கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள சூழலில் இன்னும் ஆறு மாநிலங்களில் பாடசாலைகளும் கல்லூரிகளும் ஆரம்பமாகவுள்ளன.
தலைநகர் புதுடில்லியில் 12 ம் வகுப்பு மாணவர்கள் வகுப்புகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனினும் இது கட்டாயமானதல்ல.
சில பெற்றோர் தாங்கள் பிள்ளைகளை அனுப்பப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் தனது கணவரை கொரோனாவிற்கு இழந்த நளினிசவ்கான் இ;வ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றோம்,இது எங்களை வெளியே செல்லவிடாமல் தடுக்கின்றது, நாங்கள் பொருட்களை வாங்கு செல்வதற்கு வெளியே செல்வதில்லை ஏன் இப்போது பாடசாலைகள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment