ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு வெண்டிலேட்டர் உட்பட 81 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கல் - Yarl Voice ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு வெண்டிலேட்டர் உட்பட 81 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கல் - Yarl Voice

ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு வெண்டிலேட்டர் உட்பட 81 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கல்



ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு வெண்டிலேட்டர் உட்பட  சுமார் 81 இலட்சம் ருபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள்  சுருவில்  சவரிமுத்து பவுண்டேசனால் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில்  வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தீவகம் சுருவிலை சேர்ந்த சவரிமுத்து ஞாபகர்த்தமாக  அவரது குடும்பத்தினர் தமது சொந்த நிதியில் இவ் உதவியினை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளார்கள். 

இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ஜெயக்குமார் அடிகளார் உத்தியோக பூர்வமாக கலந்து கொண்டு சவரிமுத்து பவுண்டேசன் சார்பில் இவ் உதவிகளை கையளித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post