மரணம்!!.. "அப்பாவோட சேர்ந்துட்டாங்க!".. தாயை பறிகொடுத்த சோகத்தில் நடிகர் அக்‌ஷய்குமார்! - Yarl Voice மரணம்!!.. "அப்பாவோட சேர்ந்துட்டாங்க!".. தாயை பறிகொடுத்த சோகத்தில் நடிகர் அக்‌ஷய்குமார்! - Yarl Voice

மரணம்!!.. "அப்பாவோட சேர்ந்துட்டாங்க!".. தாயை பறிகொடுத்த சோகத்தில் நடிகர் அக்‌ஷய்குமார்!



பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான அக்‌ஷய் குமார் தம் நடிப்பில் அர்ப்பணிப்பு மிக்கவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஷங்கரின் பிரம்மாண்டமான திரைப்படமான  2.0  படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், அவர் பக்ஷி ராஜன் மற்றும் வில்லன் வேடத்தில் மிரட்டினார்.

இந்நிலையில்தான் நடிகர் அக்‌ஷய் குமார், அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த செய்தி வந்தவுடன், இங்கிலாந்தில் தான் நடித்துக்கொண்டிருந்த சிண்ட்ரல்லா படப்பிடிப்பில் இருந்து மும்பைக்கு விரைந்தார்.

இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர் என் உயிர். இன்று தாங்க முடியாத வலியை உணர்கிறேன். என் அம்மா ஸ்ரீமதி அருணா பாட்டியா இன்று காலை அமைதியாக இந்த உலகத்தை விட்டு வெளியேறி, வேறு உலகத்தில் என் அப்பாவுடன் மீண்டும் இணைந்தார்.

இந்தக் காலக் கட்டத்தில் நானும் எனது குடும்பத்தினரும் உங்கள் பிரார்த்தனைகளை மதிக்கிறோம். ஓம் சாந்தி.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post