நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை உணவுக்கான மாபியா ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெறுவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன் கருதியே அவசர கால விதிமுறை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் நாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடம் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவ ஆட்சிக்கு ஜனாதிபதி வழிவகுப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு போராட்டத்தையும் தண்ணீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டோ, தடியடி நடத்தியோ ஜனாதிபதி கட்டுப்படுத்த வில்லை. போராடிய எவரையும் கைது செய்யவில்லை.
அவசரகால சட்டத்தை அன்றே கொண்டுவந்து ஜனாதிபதியால் போராட்டங்களைக் கட்டுப்படுத்திருக்க முடியும். ஆனால், அவர் அன்று அவ்வாறு செய்யவில்லை என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு, இந்த அவசர கால சட்டமானது மக்களுக்காகக் கொண்டுவரப்பட்டது என்பதையும் இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment