இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தியாகி அறக்கொடை நிறுவுனர் உதவி - Yarl Voice இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தியாகி அறக்கொடை நிறுவுனர் உதவி - Yarl Voice

இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தியாகி அறக்கொடை நிறுவுனர் உதவி



யாழ் அச்சுவேலியில் இடி மின்னல் தாக்கி பலியான குடும்பஸ்தர்க்கு தியாகி அறக்கொடை நிறுவனர் நிவாரனமாக ஒரு லட்சம் ரூபா வழங்கினார்.

அச்சுவேலியில் தனது விவசாய நிலத்தில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மின்னல்; தாக்கி இன்று நன்பகல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த அந்த குடும்பஸ்தரின் வீட்டிற்கு உடனடியாக சென்ற தியாகி அறக்கொடை ஸ்hபகர் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன் ஒரு லட்ச ரூபா நிவாரனமாகவும் வழங்கினார்.

அத்துடன் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தான் உதவி செய்வதாகவும் உறுதியளித்தார்.

கொரோனா பெருந்தொற்று அச்சுருத்தும் இந்த இக்கட்டான காலகட்டத்திலும்; தனி ஒரு மனிதனாக எமது மக்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை தனது சொந்த நிதிப்பங்களிப்பில் வழங்கி வருகின்றார்.

தமது ஒரு மாத ஊதியத்தை கூட வழங்க தயங்கும் மக்கள் பிரதநிதிகள் இருக்கும் எம்மத்தியில் தான் மக்களுக்காக தினந்தோறும் பல லட்ச ரூபாய்களை அறப்பனிகளுக்காக வழங்கி வருகின்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post