யாழில் கொரோனா நிலைமை குறித்து அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice யாழில் கொரோனா நிலைமை குறித்து அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

யாழில் கொரோனா நிலைமை குறித்து அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்



தற்பொழுது யாழ்மாவட்டத்தில் தொற்றுநிலைமை சரியான முறையில் குறைந்தபாடாக இல்லை.கடந்த சில நாட்களில் குறைந்து செல்லும் போக்கு காட்டியபோதும் தற்பொழுது ஏற்ற இறக்கமாக  காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று மாலை வரை கிடைத்த தரவின்  அடிப்படையிலே மொத்தமாக 248 நபர்கள் மேலதிகமாக தொற்றாளர்களாக 

இனங்காணப்பட்டுள்ளனர்.யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 14192பேர் இன்று வரை இனங்காணப்பட்டுள்ளனர். 

281 இறப்புக்கள் பதிவாகியுள்ளன இன்று வரை தொற்றாளர்களுடன்  தொடர்பு கொண்ட வகையிலே 5384 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.

மருதங்கேணியில் 3கிராமசவகர் பிரிவும்  வேலணையில் ஒரு கிராமசேவகர் பிரிவுமாக  4 கிராமங்கள் தற்போது முடக்கத்தில் உள்ளன 

தற்போது தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

60 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி பெறுவதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன எனவே 60 வயதிற்கு மேற்பட்டவர்களின்  இறப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன எனவே பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டாது தங்களுக்குரிய தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இறப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் 

அத்தோடு அடுத்த கட்டமாக 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தினை  விரைவாக ஆரம்பிக்க எண்ணியுள்ளோம் 

 பொது முடக்கத்திலும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து கொள்ளாதமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவே பொதுமக்கள் தற்போதுள்ள பொது முடக்கத்தை துஸ்பிரயோகம் செய்யாது சுகாதார  நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலம் இறப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் அவசியமற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருத்தல்  சிறந்ததாகும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post