இலங்கையில் இதுவரை சுமார் 7,000 கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், கடந்த இரு வாரங்களில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 தொற்றானது குறைந்துள்ளதாகவும் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர். சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றினால் 55 கர்ப்பிணித் தாய்மார்கள் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்..
இந்த ஆண்டு மே மாதம் மூன்றாவது அலை ஆரம்பமாகிய பின்னர் 6,000 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
90% க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
அது அவர்களுக்கு சிக்கல்களையும் மரணத்தையும் தடுக்கும் உதவும் என்றார்.
இலங்கையில் முழுமையாக தடுப்பூசிப் பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள் எவரும் இறக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment