ஊடகங்கள், ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலுக்கு சஜித் பிரேமதாச கண்டனம்! - Yarl Voice ஊடகங்கள், ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலுக்கு சஜித் பிரேமதாச கண்டனம்! - Yarl Voice

ஊடகங்கள், ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலுக்கு சஜித் பிரேமதாச கண்டனம்!



ஊடகங்கள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட பல பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வரவழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரிவு 14 (1) தெளிவான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை சுட்டிக்காட்டுகிறது, ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தை மதிக்கும் ஊடகங்களில் இத்தகைய மிரட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துவது ஊடகங்களின் பொறுப்பாகும், தங்கள் பொறுப்புகளைச் செய்யும் பத்திரிகையாளர்களை சிஐடி முன்பு விசாரணைக்கு அழைக்கவோ மிரட்டவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால், அத்தகைய அழைப்பாணை வழங்க முடியாது.


ஊடக சுதந்திரம், மிரட்டல் மற்றும் ஊடகம் மீதான நேரடி அல்லது மறைமுக கட்டுப்பாடுகள் தொடர்பிலும் அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டக் குழு இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக பத்திரிகையாளர்களுடன் கைகோர்த்து அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post