இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை விரைவாக பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுதிக் கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
மிக விரைவாகவும் அமைதியான முறையிலும் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் தமது இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை தாமதிக்காது அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பெற்று கோவிட்-19 நோய் தொற்று தாக்கத்திலிருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மேலும் தற்போதைய இறப்பு நிலைமையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 60க்கும் மேற்பட்டோரில் பெண்கள் இறப்பு வீதம் அதிகமாக காணப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக இதுவரையான அறிக்கைகளின்படி 70 வயதிற்கு மேற்பட்டோரில் இறப்பு ஆண்கள் 79 நபர்கள் ஆகவும் ,பெண்கள் 53 நபர்களாகவும் காணப்படுகிறது.
எனவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Covid-19 தொற்றுஏற்படக்கூடிய சூழ்நிலை அதிகமாக காணப்படுவதால் எவ்வித தயக்கமின்றி இவ் தடுப்பூசி விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கமைய உரிய தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு சென்று அடுத்துவரும் நாட்களில் விரைவாக தமது தடுப்பூசியைப் பெற்று Covid-19 தொற்றிலிருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.20
Post a Comment