ஆப்கானில் தலிபானின் வளர்ச்சி என்பது மத்திய கிழக்கிற்கு பெரும் ஆபத்து எனஆய்வாளர் Dnyanesh Kamat தெரிவித்துள்ளார்.
இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமான நாடு என்ற வரலாற்று பொறுப்பிலிருந்து அமெரிக்கா அதிகளவிற்கு விலகிச்செல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு விடயங்கள் தெளிவாகின்றன- ஆப்கானில் தலிபானின் எழுச்சி மத்திய கிழக்கிற்கான பெரும் ஆபத்து, அந்த பகுதி நாடுகள் உருவாகிவரும் புதிய அச்சுறுத்தலிற்கு தீர்வை காண்பதற்காக பிராந்தியதீர்வொன்றை எட்டவேண்டும் என அவர் ஏசியன் டைம்சில் எழுதியுள்ளார்.
தலிபான்களே உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத குழு என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வசம் முழு நாடும் உள்ளது,அவர் உலக ஜிகாத்; அமைப்புகளுடனான தொடர்புகளை இன்னமும் துண்டிக்காததை கருத்தில் கொள்ளும் போது தலிபான் அதிகாரத்திற்கு வந்துள்ளமை ஆப்கானின் உடனடி அயல்நாடுகளிற்கும் அந்த பகுதிக்கும் ஆபத்தான விடயம் என ஆசியா டைம்சில் அவர் எழுதியுள்ளார்.
தலிபான்கள் அமெரிக்காவின் பிளக்ஹவ்க் ஹெலிக்கொப்டர்கள் மற்றும் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட ஏஎன் 29 தாக்குதல் விமானங்கள் முன்னாள் காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் காண்பிக்கின்றன அதற்கு அப்பால் முன்னைய அரசாங்கத்திடம் ரஸ்யாவின் எம்ஐ 17 ஹெலிக் கொப்டர்கள் காணப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிரியாவின் ஹயட்- தகிஹிரீர் அல்-சாம் அமைப்பு தலிபானின் வெற்றியை தாங்கள் பின்பற்றவேண்டிய முன்மாதிரி என வரவேற்றுள்ளது,அராபிய வளைகுடாவிற்கான அல்ஹைதா ஆப்கானை விடுதலை செய்தமைக்காக தலிபானை பாராட்டியுள்ளது,
பாக்கிஸ்தானின் டெக்ரீக்- இ- தலிபான் தலிபானிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காபுலிற்குள் நுழைந்த பின்னர் தலிபான்கள் புல்ஈசர்க்கி நகரின் சிறைச்சாலையிலிருந்து 5000 கைதிகளை விடுவித்தனர் அவர்களில் அல்ஹைதா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளனர் என அவர் எழுதியுள்ளார்.
Post a Comment