பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலி - இயக்குநர் மணிரத்னம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு - Yarl Voice பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலி - இயக்குநர் மணிரத்னம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு - Yarl Voice

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலி - இயக்குநர் மணிரத்னம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு




இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், குதிரை உள்ளிட்ட சில விலங்குகளை அதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

 அந்தவகையில், 80க்கும் மேற்பட்ட குதிரைகள் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி ஒரு குதிரை பலியானதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, இந்திய விலங்குகள் நல வாரியம் உரிய விசாரணை நடத்துமாறு ஐதராபாத் மாவட்ட ஆட்சியருக்கும், தெலங்கானா விலங்குகள் நல வாரியத்திற்கும் கடிதம் எழுதியுள்ளது.

 இந்நிலையில், அப்துல்லாபுர் பேட் காவலர்கள், இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக குதிரை பலியானது தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ அனுப்புபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என Peta அமைப்பு அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post