வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்றையதினம் வீடு திரும்பினார்.
இவருக்கு கடந்த செப்டம்பர் 11ம் திகதி கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் இன்றைய தினம் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்.
Post a Comment