தமிழ் பேசும் மக்களை பாதிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் இறுதித் தீர்மானங்கள் அமையாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. எனினும் இதுதொடர்பாக என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, மூன்று தமிழ் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயலணிகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
ஏனெனில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் மேற்கொள்ளப்படுகின்ற இறுதித் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
நுனிப் புல் மேய்கின்றவர்களும் குறுகிய அரசியல் நோக்கங் கொண்டவர்களுகளுமே இவ்வாறான விடயங்களை தமது குறுகிய அரசியல் நலன்களுக்காக பூதாகரமாக்க முயற்சிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
Post a Comment