இறுதி யுத்தத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது சர்வதேசமே பதில் சொல் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு முன் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இளங்கோதை அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
கொட்டும் மழையிலும் எமது பிள்ளைகளுக்காக போராடுகிறோம் எமது பிள்ளைகள் இருக்கிறார்களா இல்லையா? எனக்கு தெரிய வேண்டும்.
எமது பிள்ளைகள் விலங்குகள் கிடையாது இவ்வளவு காலமும் பிள்ளைகளை தொலைத்து விட்டு வீதி வீதியாக போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே நமது பிள்ளைகளுக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத்தர வழி வகை செய்ய வேண்டும் எனவும் தனது பேரப் பிள்ளையை தொடுகின்ற போது பிரதமருக்கு மெய்சிலிர்க்கும் தான் எனக் கூறுகின்றார்.
அவருடைய பேரப் பிள்ளையை போன்று தானே எங்களுடைய பிள்ளைகளையும் நாங்கள் பார்க்கின்றோம் அவருடைய பிள்ளை மட்டும் தான் பிள்ளையா அல்லது உங்களுடைய பிள்ளைகள் ஆடா அல்லது மாடா சர்வதேசம் உங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment