அண்ணாத்த படத்தைப் பார்த்து குஷியான பேரன்’ - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு - Yarl Voice அண்ணாத்த படத்தைப் பார்த்து குஷியான பேரன்’ - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு - Yarl Voice

அண்ணாத்த படத்தைப் பார்த்து குஷியான பேரன்’ - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு



அண்ணாத்த படத்தைப் பார்த்த தனது பேரன் தன்னை கட்டிப்பிடித்து 4 நிமிடம் விடவே இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

 சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 4-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் ஹூட் ஆப்பில் தனது குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி. அதில், “அண்ணாத்த' டீஸர் வெளியானதிலிருந்து எனது 3-வது பேரன் வேத், படத்தை எப்போது காண்பிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்கு 6 வயதாகிறது. ஒரு நாளைக்கு 15-20 முறையாவது கேட்டுவிடுவான்.

 இன்னும் ரெடியாகவில்லை என்றால் ஏன் ரெடியாகவில்லை என்று கேட்டுக் கொண்டிருப்பான். இவனுக்காகவே நான் இயக்குநர் சிவாவிடம் சீக்கிரம் படத்தைக் காண்பியுங்கள், பேரன் கேட்டுக்கொண்டே இருக்கிறான் என்றேன்.

நீங்கள் டெல்லிக்குப் போய்விட்டு வந்தவுடன் காட்டுகிறேன் என்றார். 27-ம் தேதி சன் நெட்வொர்க் அலுவலகத்தில் படத்தைத் திரையிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். 

எனது முதல் இரண்டு பேரன்கள் யாத்ராவும், லிங்காவும் அப்பா தனுஷுடன் கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டுப் படம் பார்த்தால் ரகளையாகிவிடும். ஆகையால், சொல்ல வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.

நான், ஐஸ்வர்யா, செளந்தர்யா, மாப்பிள்ளை விசாகன், சம்பந்தி வணங்காமுடி, உஷாம்மா என அனைவரும் 'அண்ணாத்த' படம் பார்த்தோம். 

குறிப்பாக எனக்கு அருகிலேயே உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும் என நினைத்து, வேத் உட்கார்ந்து கொண்டான். நான் நடித்த படங்களில் அவன் திரையரங்கில் பார்க்கும் முதல் படம் இது. முழுப் படத்தையும் அவ்வளவு ரசித்துப் பார்த்தான்.

 படம் முடிந்தவுடன் என்னைக் கட்டியணைத்து 3-4 நிமிஷம் விடவே இல்லை. அவனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டால் "தாத்து தாத்து" என்று சொல்வான். "தாத்து ஐ யம் ஸோ ஹாப்பி, தேங்க் யூ" என்று சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இரவு 10 மணிக்கு மேல் திரையரங்கை விட்டு வெளியே வந்தேன். எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் கலாநிதி மாறன் சார் வெளியே நின்றார். "என்ன சார், இந்த நேரத்தில் நீங்கள் வந்துள்ளீர்கள்" என்றேன். "இல்லை உங்களைப் பார்க்க வேண்டும் அல்லவா" என்றார். அவ்வளவு பிஸியான மனிதர், நிற்க வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே மேன்மக்கள், மேன்மக்களே”

0/Post a Comment/Comments

Previous Post Next Post