வலி மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு பல கட்சிகளும் ஆதரவு! 18 மேலதிக வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம் - Yarl Voice வலி மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு பல கட்சிகளும் ஆதரவு! 18 மேலதிக வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம் - Yarl Voice

வலி மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு பல கட்சிகளும் ஆதரவு! 18 மேலதிக வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்




வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி.மேற்கு - சுழிபுரம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட கூட்டமானது தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் இன்று காலை சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

தவிசாளரால் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் இடம்பெற்றது.

இதனையடுத்து வரவு செலவு தீட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

25 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 5 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3  உறுப்பினர்களும் மற்றும்  சுயேட்சை குழுவின் 2 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வக்களித்த அதே வேளை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4  உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு  உறுப்பினரும் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post