டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தன் முதல் 2 போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக துபாயில் தோற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே கூற வேண்டும்.
ஏனெனில் பாகிஸ்தான் கிட்டத்தட்ட அரையிறுதியை உறுதி செய்தது, நியூசிலாந்து அணி ஆப்கான், நமீபியா, ஸ்காட்லாந்தை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் இது அந்த அணிக்கு எளிதுதான், இந்தியாவையே பந்தாடிய பிறகு இது என்ன? ஆனால் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியே ஆக வேண்டும். சப்போஸ் தோற்று விட்டால் ஆப்கான் அணி நெட் ரன் ரேட் +3.097 என்று பயங்கரமாக உள்ளதால் அரைஇறுதி வாய்ப்பு பெறும் இந்தியாவின் வாய்ப்பும் முடிந்து போகும்.
எனவே ஆப்கானிஸ்தானை நியூசிலாந்து வென்றேயாக வேண்டும். இன்னொரு நடக்க முடியாத கற்பனை என்னவெனில் ஆப்கானை வெல்லும் நியூசிலாந்து, நமீபியா அல்லது ஸ்காட்லாந்திடம் தோல்வி அடைய வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? ஒரு கணக்கீட்டுக்காகவும் நப்பாசைக்காகவும் இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்திய அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 1.609. இங்கிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெறுவது மிகமிகக் கடினமே, ஆனால் ஒன்று செய்ய முடியும் மீதமுள்ள ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்துக்கு எதிராக நல்ல மார்ஜினில் வெற்றி பெற்று நெட் ரன் ரேட்டை உயர்த்தி வைத்துக் கொண்டு நியூசிலாந்து அணி நமீபியா அல்லது ஸ்காட்லாந்திடம் தோற்கும் அசாத்தியத்தை எதிர்நோக்க வேண்டும்.
இந்திய அணியின் போட்டிகள் வருமாறு:
இந்தியா-ஆப்கானிஸ்தான் - புதன் கிழமை, நவம்பர் 3.
இந்தியா- ஸ்காட்லாந்து - வெள்ளிக்கிழமை நவம்பர் 5.
இந்தியா - நமீபியா - திங்கள், நவம்பர் 8.
இந்திய அணி தன் திறமைகளைத் தாண்டி கிரிக்கெட் என்பது ஒரு நிச்சயமின்மைகளின் ஆட்டம் என்ற பழமொழியை நம்பியிருக்க வேண்டியுள்ளது, நிச்சயமின்மையின் ஆட்டம்தான் கிரிக்கெட், ஏனெனில் இந்தியா இப்படி ஆகும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். டி20 உலகக்கோப்பை தொடங்கும் முன்பே கொடுத்த பில்ட்-அப்பில் கோப்பையையே வென்று விட்டதாகவல்லவா ரசிகர்களும் இந்த ஊடகங்களும் நம்பியிருந்தன.
எனவே கிரிக்கெட் ஆட்டம் போற்றுதற்குரிய நிச்சயமின்மைகளால் நிரம்பியது என்ற பழமொழிக்கு இணங்க இந்திய அணியும் காத்திருக்க வேண்டியதுதான்.
Post a Comment