மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.
தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார். புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைக்க வழி செய்துள்ளனர்.
விழிப்படலத்தின் முன் பகுதி, பின் பகுதியை தனித்தனியாகப் பிரித்து நவீன தொழில்நுட்பம் மூலமாக அறுவை சிகிச்சை செய்து நால்வருக்கு பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் வயதினர் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment