முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், இந்த நிலைமைகளால் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது முட்டை ஒன்றின் விலை 22 முதல் 25 ரூபா வரையிலும், ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 ரூபா முதல் 850 ரூபா வரையிலும் விற்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
விலை கடுமையாக உயர்ந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விலை அதிகரிப்பை அடுத்து முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விற்பனையும் குறைந்துள்ளதாகவும் இந்த நிலைமைகளால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக் கியுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment