சுமார் 8 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிரந்தர நியமனம் கேட்டுப் போராடி வந்த சுகாதார தொண்டர்களின் போராட்டப் பந்தல் வடமாகாண ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து நேற்றைய தினம் மாலை அகற்றப்பட்டது.
தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் தகரப் பந்தல் அமைத்து இரவு பகலாக போராடி வந்தனர்.
இந்நிலையில் தமது நிலைமையை அறிந்து எம்முடன் கலந்துரையாடி எமது பிரச்சினைகளை தீர்ப்பதாக ஆளுநர் உறுதி அளித்தாதன் காரணமாக அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து குறித்த தகரப்பந்தல் அகற்றப்பட்டது த் தெரிவிக்கப்பட்டது
Post a Comment