புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு இன்றைய தினம் மயிலிட்டியில் புதிய வீடு ஒன்றுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இவர் அண்மையிலேயே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை
செய்யப்பட்டிருந்தார். இவரது பெற்றோர் உயிரிழந்துள்ளதுடன் இவர் தற்போது சகோதரியுடன் வசித்து வருகின்ற நிலையில் இராணுவத்தினரிடம் உதவியினை கோரியநிலையில் இந்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அதேவேளை குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பம் ஒன்றுக்காக உடுவில் பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட புதிய இல்லம் ஒன்றும் பயனாளிகளிடம் இராணுவத் தளபதியினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு உட்பட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment