பாடசாலைகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவி னால், பாடசாலைகளை மூடுவதற்கு பரிந்துரைக்கப்படும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகப் பெற்றோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்று வரை பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவதில் பலவீனமாக இருப்பதனால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதா கவும், எதிர்காலத்தில் 4 ஆவது அலை தோன்ற வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மீண்டும் ஒரு தொற்று ஏற்பட்டு நாட்டை மூடுவதா,பாடசாலையை மூடுவதா என்பது மக்களின் நடவடிக்கையில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.