அமைச்சு பதவிக்கு ஆசைப்படுவோர் எம்மை வெளியேற்றி விட்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி- உதய கம்மன்பில - Yarl Voice அமைச்சு பதவிக்கு ஆசைப்படுவோர் எம்மை வெளியேற்றி விட்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி- உதய கம்மன்பில - Yarl Voice

அமைச்சு பதவிக்கு ஆசைப்படுவோர் எம்மை வெளியேற்றி விட்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி- உதய கம்மன்பில



அமைச்சு பதவிகளுக்கு ஆசைப்பட்டு தம்மையும் வேறு சிலரையும் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு சில சிறிய நபர்கள் முயற்சிப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சத்தமிட்டுக் கூச்சலிடுவோரை அனுப்பினால் இன்னும் அதிகமாகத் தவறு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்.தமது பதவிகளைப் பணயம் வைத்துத் தான் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இவர்களை வெளியேற்றினால் பதவிகளைப் பெற்று விடலாம் என நினைப்போர் எம்மை வெளியேறச் சொல்கிறார்கள் என்றும் நாட்டுக்கு ஆபத்து என்றால் அதனை யார் செய்தது என்று பாராது யார் தவறு செய்தாலும் அது தவறு தவறுதான் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post