தலிபானை உயர்த்திவிடும் நடவடிக்கைகளில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஈடுபடக்கூடாது என மலாலா யூசுப்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட டிடிபி அமைப்புடன் பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏனைய தரப்பின் கரிசனைகளை கருத்தில்கொள்ளவேண்டும் அல்லது அவர்கள் வலுவானவர்கள் என்ற அடிப்படையிலேயே இன்னொரு தரப்பினருடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளவேண்டும், ஆனால் தலிபானிற்கு எந்தவித மக்கள் ஆதரவும் இல்லை என மலாலா டோவ்ன் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானின் எந்த பகுதியும் தலிபான் வேண்டுமென தெரிவிக்கவில்லை இதன் காரணமாக அவர்களை உயர்த்திவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலிபான் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள மலாலா அவர்கள் பெண்கள் கல்விக்கு எதிரானவர்கள் மகளிர் உரிமையை ஏற்றுக் கொள்வதில்லை அவர்களின் ஆட்சியில் நீதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னை அர்ப்பணித்துள்ள மகளிர் கல்வி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள மலாலா அங்கு நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
பெண்கள் கல்வி மீதான தற்காலிக தடை நீண்;ட காலம் நீடிக்ககூடாது என தெரிவித்துள்ள அவர் தலிபானின் முதலாவது ஆட்சிக்காலத்தில் ஐந்து வருடம் நீடித்தது என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.
நாங்கள் முன்னைய ஆட்சி மீண்டும் திரும்புவதை விரும்பவில்லை,ஆனால் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆப்கான் மீதான அழுத்தங்கள் சாதகமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்ல தலிபான் மோசமான தலிபான் என வித்தியாசப்படுத்தக்கூடாது அவர்களது சிந்தனை ஒடுக்குமுறை சிந்தனையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment