யாழ்ப்பாணம் - நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை கார்த்திகை தீபத் திருநாளான இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் குறித்த நிலை நிறுவப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளான இன்று காலை 10.30 மணியளவில், இறைவணக்கம் செலுத்தப்பட்டு நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன் நாவலர் பெருமானின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment