யாழ்ப்பாணம் - வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும் இன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு சென்றிருந்தனர்.
மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி அன்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது.
இந்த விடையம் தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் காணி உரிமையாளர்களும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் யசோதா உதயகுமாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தனக்கு மேல் இடத்தில் இருந்துவரும் உத்தரவுகளையே தான் நடைமுறை படுத்துவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment