தீவகத்தில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தம் - Yarl Voice தீவகத்தில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தம் - Yarl Voice

தீவகத்தில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தம்


யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லைப்பிட்டி ஜெ 10 சேவகர் பிரில் 7 பரப்பு காணியும், மண்கும்பான் ஜெ 11 சேவகர் பிரில் 8 பரப்பு காணியும் மற்றும் புங்குடுதீவு ஜெ 24 சேவகர் பிரில் 14.2 ஏக்கர் காணியும் கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.

இருப்பினும் குறித்த இடங்களில்  ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post