நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதா்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"மக்கள் அடிப்படை சுகாதார விதிகளுக்கு இணங்க வில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும்" என்று அவர் கூறினார்.
தற்போது தினமும் 500 தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், மக்கள் சரியான சுகாதார விதிகளைப் பின்பற்றாவிட்டால், அந்த எண்ணிக்கை 1500 ஐ தாண்டுவதற்கு அதிக காலம் எடுக்காது என்றும் அமைச்சர் கூறினார்.
Post a Comment