கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு இளைஞர் படுகாயம்! - Yarl Voice கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு இளைஞர் படுகாயம்! - Yarl Voice

கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு இளைஞர் படுகாயம்!



யாழ்ப்பாணம் கொக்குவில் கேணியடிப் பகுதியில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரே இளைஞரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

கை, கால் பகுதிகளில் காயமடைந்த குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post