பினிஷர் டூ பினிஷர்”.. ஷாருக்கானின் அதிரடி ஆட்டத்தை பார்த்து ரசித்த மகேந்திர சிங் தோனி - Yarl Voice பினிஷர் டூ பினிஷர்”.. ஷாருக்கானின் அதிரடி ஆட்டத்தை பார்த்து ரசித்த மகேந்திர சிங் தோனி - Yarl Voice

பினிஷர் டூ பினிஷர்”.. ஷாருக்கானின் அதிரடி ஆட்டத்தை பார்த்து ரசித்த மகேந்திர சிங் தோனி



கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த பினிஷர்களில் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. பலமுறை இறுதி வரை களத்தில் நின்று அணிக்காக வெற்றி தேடிக் கொடுத்துள்ளார் அவர்.

 அப்படிப்பட்ட அவரை தனது ஆட்டத்தின் மூலம் திரும்பிப் பார்க்க செய்துள்ளார் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான்.

கர்நாடக அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியில் 15 பந்துகளில் 33 ரன்களை விளாசி இருந்தார் ஷாருக்கான். அதில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 16-வது ஓவரில் களம் இறங்கிய அவர் இறுதி வரை நிதானமாக இருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்

 கிட்டத்தட்ட தோனியின் அணுகுமுறையில், அவரது பாணியிலேயே இந்த இன்னிங்ஸை விளையாடி இருந்தார் ஷாருக். அவரது இன்னிங்ஸ் மூலம் தமிழ்நாடு கிரிக்கெட் அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை மீண்டும் தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில் சிறந்த பினிஷரான தோனி, ஷாருக்கானின் ஆட்டத்தை ரசித்து பார்த்துள்ளார். அவர் தொலைக்காட்சியில் நேரலையில் போட்டியை கண்டுகளித்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஒரு சிறந்த பினிஷர் மற்றொரு பினிஷரின் ஆட்டத்தை பார்த்த போது” என அதற்கு கேப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post