யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது நேற்றையதினம் காரைநகரில் குழப்பம் ஒன்று இடம்பெற்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சரிடம் கேள்ளி எழுப்பியிருந்தனர்.
குறித்த கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
நேற்றைய தினம் காரைநகரில் அமைச்சரை விரட்டியடித்த மக்கள் என பத்திரிகை ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றது,
இனவாதம் மதவாதத்தை தூண்டி மக்களை குழப்பம் அடைகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை
நான் நேற்றைய தினம் காரைநகருக்கு விஜயம் செய்த போது அங்கே கூறியிருக்கின்றார்கள் அமைச்சர் ஒருவர் வருகிறார் இங்கே விகாரை கட்டுவதற்காக என்று
ஏன் அவ்வாறு பொய் கூறுகின்றார்கள் இவ்வாறு மீண்டும் மதவாதம் இனவாதத்தை தூண்டி சாதாரண மக்களை மீண்டும் பிரச்சினைகளுக்க உள்ளாக்க நினைக்கின்றார்கள் நேற்றைய சம்பவத்திற்கு பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை நான் உணருகின்றேன் என தெரிவித்தார்.
Post a Comment