அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு அரசாங்கம் முன்னோக்கிச் செல்ல விடாமல் தடையாக இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை ஆட்சிப் பீடத்தில் ஏற்றினால் அந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலிறுயுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் பயணத்துக்குத் தடை ஏற்படுத்தும் தரப்பினர் ஆளும் கட்சியா எதிர்க்கட்சியா அல்லது ஏனைய சக்திகளா என்பது பற்றி கரிசனையில்லை என்றும் அனைத்து தரப்பினரையும் எமது பாதை யிலிருந்து அகற்றுவதற்குத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால தலைமுறையினருக்கு நல்லதொரு நாட்டை உருவாக்குவதே எமது நோக்கம் என அவர் தெரிவித் துள்ளார்.
அரசாங்கத்தின் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து தரப்பினரும் அகற்றப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment