தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த தனக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன் எனவும் மனோ கணேசன் இன்றிரவு தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment