பொதுமக்கள் எச்சரிக்கைகளிற்கு மத்தியிலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் புறக்கணிப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கொரோனாவின் பிடியிலிருந்து முற்றாக விடுதலையாகியுள்ளது போல மக்கள் நடந்துகொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இன்னமும் ஆபத்தின் பிடியிலிருந்து விடுபடவில்லை என்பதையும் கொரோனா எந்தவேளையிலும் மீண்டும் அதிகரிக்கலாம் என்பதையும் மக்கள் மனதில் வைத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகளும் திருமணங்களும் கொரோனா அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
“
Post a Comment