யாழ்ப்பாணம் கடற்கரையோரமாக உள்ள பகுதிகள் தொடர்ந்தும் பள்ளத்தில் காணப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க முன்வருமாறு யாழ் மாநகர பிரதி முதல்வர் ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் குடாநாட்டில் பெய்த அடைமழை காரணமாக கரையோரப் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
பல குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் பலர் தமது வீடுகளில் கட்டில்கள் வாங்குதல் என அதற்கு மேல் இருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே வெள்ளம் அற்ற பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment