எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பு தொடர்பில் சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், தற்போது நாவலரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment