139 குடும்பங்களைச் சேர்ந்த 463 நபர்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6.30 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் இதுவரை 7,584 குடும்பங்களைச் சேர்ந்த 25,508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 75 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி,கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற அமைப்புகளும் பொது அமைப்புகளும் தன்னார்வ இளைஞர் அமைப்புகளும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment