அடை மழை காரணமாக நாளையும்(10) யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக யாழ்ப்பான மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலையை தொடர்ந்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பாடசாலைக்கே திறப்பதற்கான மாற்று தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment