தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையான பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையை திறந்து நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், வைத்தியசாலைக்கு பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மருத்துவமனையின் பல அத்தியாவசிய பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.
மூன்று மாதங்களுக்குள் வைத்தியசாலை அனைத்து சேவைகளுடனும் இயங்குவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி வைத்தியசாலையை அங்குராப்பணம் செய்யும் போது, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எக்ஸ்ரே அறைகள், ஆய்வகங்கள், CT ஸ்கேன் அறை மற்றும் ஆறு அறுவை சிகிச்சை அலகுகள் இன்றுவரை மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment