உடுவில் பகுதியில் உள்ள வீட்டின் மீது நேற்றைய தினம் மாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்
தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் ஏனைய உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--
Post a Comment