நாளை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் விசேட ஊடக சந்திப்பு இன்று
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நேற்றும் இன்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் நிலைமைகள் ஓரளவு
சுமூகமானதைத் தொடர்ந்து நாளை முதல் பாடசாலை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.
பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் மேலதிகமான எந்த தீர்மானங்களையும் நாங்கள் இதுவரை எடுக்கவில்லை என்றார்.
Post a Comment